சீன புத்தாண்டு சிறப்பு டோல் கட்டண தள்ளுபடி!

சீன புத்தாண்டை முன்னிட்டு பினாங்கு இரண்டாவது பாலத்தில் 10 சதவீத சிறப்பு கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

சீனப் புத்தாண்டில் பாலத்தைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு சலுகையாக இரண்டாவது பாலம் 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.

இந்த சலுகை ஜனவரி 25 நள்ளிரவு முதல் இரவு 11.59 மணி வரை இருக்கும் என்று ஜே.கே.எஸ்.பி தலைமை நிர்வாக அதிகாரி பைசல் ஷாபுதீன் தெரிவித்தார். இது அந்நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக வழங்கப்படுவதாகவும், பாலத்தை பயன்படுத்தும் மக்களுக்கு (குறிப்பாக இரண்டாவது பினாங்கு பாலத்தின் பயனர்கள்) நன்றியை தெரிவிக்கும் வகையிலும் இருக்கும் என கூறினார்.

“இந்த பகுதியில் போக்குவரத்து அளவு அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தீபகற்ப மலேசியாவை தீவுடன் இணைக்கும் இப்பாலம் முக்கியமான பாலமாகும்” இன்று அங்குள்ள டோல் சாவடியில் சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் சந்தித்தபோது அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தைமுன்னிட்டு இணைந்து ஜே.கே.எஸ்.பியின் ஒத்துழைப்புடன் பினாங்கு சாலை பாதுகாப்புத் துறை (ஜே.கே.ஜே.ஆர்) இந்த பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. பினாங்கு ஜே.கே.ஜே.ஆர் இயக்குனர் எம். துர்கா தேவியும் இதில் கலந்து கொண்டார்.