கோலாலும்பூர் உயர்நீதிமன்றம் சோஸ்மா மீதான தீர்ப்பால் கட்டுப்பட்டது

இங்குள்ள கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், மற்றொரு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் கட்டுப்படுவதாகவும் ஒரு பயங்கரவாத குற்றம் சாட்அப்பட்டவரின் ஜாமீன் விண்ணப்பத்தை பரிசீலிக்கபட முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி அஹ்மத் ஷாஹிர் மொஹமட் சல்லேஹ் இந்த தீர்ப்பை வழங்கினார்.

கடந்த வாரம், மற்றொரு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும், அந்நீதிமன்றம் தற்போதைய நீதிமன்றத்தின் நிலையில் (status) ஒரே மாதிரியாக இருப்பதையும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் போன்ற உயர் நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட தீர்ப்பால் மட்டுமே அவர்கள் கட்டுப்படுவார்கள் என்பதையும் கடந்த வாரம் குணசேகரன், சாமிநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோரின் விண்ணப்பங்களை கேட்ட நீதிபதி முஹம்மது ஜமீல், நீதிபதி அஹ்மத் ஷாஹிர் மற்றும் நீதிபதி சீக்வேரா ஆகிய மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.