சிங்கப்பூர், ஜனவரி 24 – இன்று மதியம் முதல் உட்லேண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் (Woodlands and Tuas checkpoints) உடல்வெப்பநிலை பிரத்யேக சோதனை (temperature screening) செயல்படுத்தப்படும் என்பதை தரை வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசியர்கள் கவத்தில் கொள்ள வேண்டும்.
குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ஐ.சி.ஏ)/Immigration & Checkpoints Authority (ICA) கருத்துப்படி, இது சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் தோன்றி பிற நகரங்கள் மற்றும் நாடுகளுக்கு பரவியுள்ளதால் இந்த சோதனைகள் அவசியம் என்றார். அதோடு, எதிர்வரும் சீனப்புத்தாண்டு விடுமுறை காலத்தை முன்னிட்டு, ஜனவரி 25 முதல் 28 வரை மக்கள் பயணத்தின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். சாலை போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் தாமதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் போக்குவரத்து நிலைமைகளை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“சோதனைச் சாவடிகளுக்கு வரும் பயணிகள் அங்குள்ள சுகாதார உதவியாளர்களால் நடத்தப்படும் பிரத்யேக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சந்தேகத்திற்கிடமான நபர்கள் மேல் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்,” என்றார்.
பஸ், ரயில், கார், மோட்டார் சைக்கிள், லாரி போன்ற அனைத்து போக்குவரத்து முறைகளுக்கும் பிரத்யேக பரிசோதனை படிப்படியாக செயல்படுத்தப்படும். மேலும் பயணிகள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பெர்னாமா