இன்று (மலேசிய நேரம்) அதிகாலை 3.10 மணியளவில் கரீபியனில் (Carribean) வலுவான பூகம்பம் ஒன்று ஏற்பட்டது.
ஜமைக்கா (Jamaica), கேமன் தீவுகள் (Cayman Islands) மற்றும் கியூபா (Cuba) இடையே கடலில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கேமன் தீவுகளுக்கு மிக அருகில் 6.1 அளவிலான நிலநடுக்கமும், மற்ற பல தொடர் நடுக்கங்களும் வந்தன.
சர்வதேச சுனாமி தகவல் மையம் சுனாமி அலையின் அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனக் கூறியது. ஆனால், சுமார் 30cm வரை சிறிய கடல் மட்ட ஏற்ற இறக்கங்கள் சாத்தியமாகியுள்ளன என அது தெரிவித்தது.
கியூபா முழுவதும் பல மாகாணங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
“நிலநடுக்கம் கடலில் நடந்ததால் பெரிய பாதிப்பு இல்லை. இதுவே நிலத்தில் ஏற்பட்டிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்” என்றார் தேசிய பூகம்ப தகவல் மையத்தின் புவி இயற்பியலாளர் டான் பிளேக்மேன்.