நாளை முதல் தேர்தல் ஆணையம், 914 இடங்களில் Q4 2019 வாக்காளர் பட்டியலைக் வெளியிடும்.
2019-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், தகுதியுள்ள குடிமக்களிடமிருந்து புதிய வாக்காளர் பதிவுக்காக 27,345 விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது.
அதைத்தவிர, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடமிருந்து தேர்தல் வாக்களிக்கும் இட மாற்றத்திற்கான 11,869 விண்ணப்பங்களும் பெறப்பட்டதாக அதன் தலைவர் டத்தோ அசார் அஜீசன் ஹருன் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் 2019 நான்காம் காலாண்டு துணை தேர்தல் பட்டியலில்/2019 Fourth Quarter Supplementary Electoral Roll (RDPT) உள்ள தகவல்களில் அப்பெயர்கள் உள்ளன. இது நாளை முதல் பிப்ரவரி 12 வரை நாடு முழுவதும் உள்ள 914 இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.
அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 (2019) வரை, புதிய வாக்காளர்களாக பதிவு செய்ய விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மற்றும் தேர்தல் வாக்களிக்கும் இட மாற்றத்திற்கு விண்ணப்பித்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், தங்கள் பெயர்களை, ஆர்.டி.பி.டி-யில் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் பிழைகள் அல்லது முறைகேடு இருந்தால், படிவம் B அல்லது C-ஐ பூர்த்தி செய்வதன் மூலம் புகார் செய்யலாம் என்று இன்று இங்கே ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்த இரண்டு வார காலத்தில், இறந்தவர்கள் அல்லது குடியுரிமை அந்தஸ்தை இழந்தவர்கள் போன்றவர்களின் பெயர்களையும் ஆர்.டி.பி.டி வாக்காளர் பட்டியலில் காண்பிக்கப்படும் என்று அசார் கூறினார்.
சேவையில் இல்லாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பற்றிய தகவல்களைப் பெற தேர்தல் ஆணையம் தற்போது மலேசிய காவல்துறை, மற்றும் மலேசிய ஆயுதப்படைகள் ஆகியவற்றுடன் பணியாற்றி வருவதாக மேலும் தெரிவித்தார்.
பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தை 03-8892 7018 அல்லது மாநில தேர்தல் அலுவலகங்களிலும் அல்லது www.spr.gov.my அல்லது MySPR Semak mobile app பயன்பாட்டிலும் தொடர்பு கொள்ளலாம்.
- பெர்னாமா