இதுவரை, வுஹான் வைரஸைத் தடுக்க மலேசியர்கள் மூக்கு மற்றும் வாய் மூடியை அணிய வேண்டிய அவசியமில்லை என்று சுங்கை புலோ மருத்துவமனை மருத்துவ நிபுணர் டாக்டர் பெனடிக்ட் சிம் தெரிவித்தார்.
மலேசியர்களிடையே வைரஸ் பரவுவதில்லை என்பதே இதற்குக் காரணம் என்றார்.
“அதனால்தான் மக்கள் தொடர்ந்து மூக்கு மற்றும் வாய் மூடியை அணிய வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கவில்லை.
இருப்பினும், ஒருவேளை தொற்று பரவல் ஆரம்பித்தால், ஆலோசனையும் மாறக்கூடும், பின்னர் முகமூடி அணிய வேண்டியத் தேவை ஏற்படும்” என்று புத்ராஜெயாவில் இன்று வைரஸ் குறித்த ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.
இதுவரை, மலேசியர்கள் சீனாவுக்குச் செல்லும்போது மட்டுமே மூக்கு மற்றும் வாய் மூடியை அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சிம் கூறினார்.
“பொதுவில் இருக்கும்போது மூக்கு மற்றும் வாய் மூடியை அணிய வேண்டிய நிலைமை இன்னும் இல்லை. ஆனால், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூக்கு மற்றும் வாய் மூடியை அணிய விரும்பும் எவரும் அவ்வாறு அணியலாம்.
“தற்போதைய நிலைமை பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது என்பதையும் தனிப்பட்ட சுகாதாரத்தின் முக்கியத்துவம்
அதிகரித்துள்ளது என்பதையும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று அவர் கூறினார்.