கொரோனா கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 360-ஆக உயர்ந்தது

சீனாவின் ஹூபே, 56 புதிய கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவுசெய்து, ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 360 ஆக உயர்ந்ததுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையமான சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று 56 புதிய இறப்புகள் பதிவாகி, மொத்தம் 350-ஆக உயர்ந்துள்ளது என்று உள்ளூர் சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 2-ம் தேதி மாகாணத்தில் 2,103 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகி, நாள் முடிவில் மொத்தம் 11,177-ஐ எட்டியுள்ளது.

AFP இன் தகவல்களின்படி, மொத்த இறப்பு எண்ணிக்கை 360-ஆக உள்ளது. 16,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. இது 2003-ல் SARS வைரஸால் இறந்த 349 பேரை மிஞ்சியுள்ளது.