“PPSMI கொள்கை வரவேற்கத்தக்கது, ஆனால் கவனம் தேவை” – தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம்

தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் (NUTP) (National Union of the Teaching Profession) PPSMI-யின் மறுமலர்ச்சியை வரவேற்கிறது, ஆனால் கவனம் தேவை என்கிறது.

அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கையை (PPSMI) அமலாக்குவதற்கு முன், இதற்கு முன்னர் எதிர்கொண்ட அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு, கவனமாக செய்யப்பட வேண்டும் என்று NUTP தெரிவித்துள்ளது.

PPSMI கொள்கையை வரவேற்ற NUTP தலைவர் அமினுதீன் அவாங், ஆசிரியர்கள் தயார்நிலையில் இல்லாததை மேற்கோள் காட்டினார்.

“கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட வேண்டும் என்ற பிரதமரின் ஆலோசனையை NUTP ஆதரிக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் அமைச்சர் கவனமாக கையாள வேண்டும், அப்போதுதான். இது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு சரியானதாக இருக்கும்” என்று கூறினார்.

முன்பு PPSMI-ஐ அமல்படுத்தப்பட்டபோது ஆசிரியர்களிடையே மொழித் திறன் பிரச்சினை, முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருந்தது என்று அமினுதீன் கூறினார்.

“செயல்படுத்துவதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன – திறமையற்ற ஆங்கில புலமைவாய்ந்த ஆசிரியர்கள், இரட்டை மொழி தேர்வுத் தாள்களைத் தயாரிப்பதில் சிரமம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் வரை ஆசிரியர்களிடையே உந்துதல் இல்லாமை ஆகிய சிக்கல்கள் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், 2016-ஆம் ஆண்டில் ஒரு முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய இரட்டை மொழித் திட்ட முறை (Dual Language Programme) போதுமானது என்று அமினுதீன் கூறினார். இது பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுமா என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

அதே சமயம், ஆசிரியர்கள் பற்றாக்குறையால், இரட்டை மொழித் திட்ட முறையை செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதனால், தங்கள் குழந்தைகளுக்கு இரட்டை மொழித் திட்ட முறை வேண்டும் எனும் பெற்றோர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

“ஓய்வூதியம் காரணமாக PPSMI கற்பித்த பழைய ஆசிரியர்கள் படிப்படியாக குறைந்துவிட்டதால் இப்போது போதிய ஆசிரியர்கள் இல்லை. எனவே தற்போது பெரும்பான்மையில் உள்ள அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் தேசிய மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாதவர்கள்.

“கணிதம் மற்றும் அறிவியலுக்கான பாடப்புத்தகங்களை ஆங்கில மொழியில் பெறுவதில் கூட எங்களுக்கு பிரச்சினைகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

“தற்போதைய இரட்டை மொழித் திட்ட முறையை தொடர்வது கூட கடினமாக உள்ளது” என்று அவர் மேலும் மேற்கோள் காட்டினார்.

PPSMI கொள்கை ஆரம்பத்தில் எதிர்ப்புகளை சந்தித்தது, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. இது 2011-இல் அகற்றப்பட்டது.

அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் மகாதீரின் சமீபத்திய உந்துதல் மீண்டும் இதேபோன்ற விவாதங்களைத் தூண்டியுள்ளது. முன்னாள் துணை கல்வி அமைச்சர் பி. கமலநாதனும் இந்த கொள்கையை அவசரப்படாமல், கவனமாக அமல்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.