தற்கொலைக்கு முயன்ற ஊனமுற்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்

ஊனமுற்றவர் தற்கொலைக்கு முயன்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்

தற்கொலைக்கு முயன்ற ஊனமுற்ற நபர் ஒருவருக்கு திரங்கானுவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று ஆறு மாத சிறைத்தண்டனையை விதித்தது.

தற்கொலை சட்டவிரோதமானது அல்ல என்று புத்ராஜயா தீர்மானிக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த தீர்மானம் குறித்து ஆண்டு நடுப்பகுதி வரை சட்டத்தில் எந்த மாற்றங்களையும் எதிர்பார்க்க முடியாது என தெரிகிறது.

38 வயதான முகமட் சானி ஈசாவுக்கு இந்த தண்டனையை மாஜிஸ்திரேட் நோர்டியானா அப்துல் அஜீஸ் வழங்கினார். முகமட் சானி தண்டனைச் சட்டத்தின் 309-வது பிரிவின் கீழ் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று ஆஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது. அவர் எந்த வழக்கறிஞராளும் பிரதிநிதிக்கப்படவில்லை.

பிரிவு 309, “யார் தற்கொலைக்கு முயன்றாலும், அத்தகைய குற்றத்தைச் செய்வதற்கு எந்தவொரு செயலையும் செய்தாலும், அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி கோலா நெருஸில் உள்ள ஒரு வீட்டில் நைலான் கயிற்றால் தூக்கிலிட முயன்றதாக சானி மீது குற்றம் சாட்டப்பட்டது.

சானி மன அழுத்தத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவரது தண்டனைக்கு முன்னர், ஜோகூரின் தம்போய் நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் மதிப்பீடு சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் துறையை சார்ந்த அமைச்சர் லீ வு கியோங், தற்கொலை சட்டவிரோதமானது அல்ல என்று தீர்மானிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த ஆண்டு நடுவில் சட்ட திருத்தங்களை அறிமுகப்படுத்தும் என நம்புகிறது என்றும் கூறினார்.

தற்கொலை, ஒரு குற்றமாக இல்லாமல், ஒரு மனநல பிரச்சினையாக அணுக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றார்.

“தற்கொலை சட்டவிரோதமானது அல்ல என்று சட்டத்தீர்மானம் செய்வதற்கு முன், இந்த மனநலப் பிரச்சினையை கையாள்வதில் பொருத்தமான, பயனுள்ள மாற்று வழிமுறைகள் இருக்க வேண்டும்.

“ஒரு சில காமன்வெல்த் நாடுகளில் இருக்கும் வெவ்வேறு மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் செய்யப்படும்” என்று அவர் கூறினார்.