ஊழல் வழக்கு விசாரணையின் முதல் நாளில் ரோஸ்மா ஆஜராக வில்லை

ரோஸ்மா மன்சோர் இன்று தன் ஊழல் வழக்கு விசாரணையின் முதல் நாளில், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது வழக்கறிஞர் ஜக்ஜித் சிங் கூறினார்.

“குற்றம் சாட்டப்பட்டவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். பிப்ரவரி 2 தேதியிட்ட சுகாதார அறிக்கையின் நகலை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளோம்” என்று அவர் நீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லானிடம் தெரிவித்தார்.

சரவாக் மாநிலத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் 369 பள்ளிகளில் சூரிய மின்சார வசதி வழங்கவும் நிறுவவும் நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட்டை லஞ்சமாக கோரியதாக ரோஸ்மா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.