போதைப்பொருள் வழக்கில் ஊடகங்கள் உட்பட வழக்கில் சம்பந்தப்படாத அனைவரும் நீதிமன்ற அறையை காலி செய்யுமாறு கேட்டுக்கொண்டதை குறித்து மலேசிய பார் கவுன்சில் கவலை எழுப்பியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் ஆவணங்களை பொய்யாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு போலீஸ்காரரின் விசாரணையை மறைக்க, ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மலேசிய பார் கவுன்சில் இன்று கவலை தெரிவித்துள்ளது.
இன்று ஒரு அறிக்கையில், பார் கவுன்சில் தலைவர் அப்துல் ஃபரீத் அப்துல் கபூர் (புகைப்படம், மேலே), நீதி நலன் மற்றும் முக்கிய தகவல்களைப் பாதுகாக்கும் அடிப்படையை பார் கவுன்சில் மதித்து அங்கீகரிக்கிறது என்று கூறினார். ஆனாலும், பொது நலனுக்காக சேவை செய்வது அதைவிட முக்கியமாக இருக்க வேண்டும் என்பதால் இது போன்ற விசயத்தில் இன்னும் நியாயமான முறையில் செயல்பட அழைப்பு விடுத்தார்.
ஜனவரி 29ம் தேதி ஒரு காவல்துறை அதிகாரி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டபோது, ஷா ஆலாமில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஊடகங்கள் உட்பட இந்த வழக்கில் சம்பந்தப்படாத நபர்கள் அனைவரையும் வெளியேறச் செய்தது குறித்து அவர் கருத்துரைத்தார்.
இந்த வழக்கு முக்கியமான விஷயங்களை கையாழ்கிறது என்ற காரணத்தை முன்வைத்து துணை அரசு வக்கீல் நூர் ஷஸ்வானி கோரிக்கை விடுத்த பின்னர் இது நிகழ்ந்தது.
மோசடி செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 465-ன் கீழ் அந்த அதிகாரியின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குற்றம் நிருபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
“அரசு வக்கீலின் அதிகாரங்களை நிறைவேற்றும்போது ஒரு டிபிபி, பத்திரிகை சுதந்திரத்தை சமநிலைப்படுத்தி, சட்டத்தை நிலைநிறுத்தி, பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கான இயல்பான உரிமையை அளிக்கவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்” என்று அவர் கூறினார்.
“பொது நலனுக்கு சேவை செய்வது எப்போதுமே ஒரு முக்கிய அம்சமாக இருக்க வேண்டும்” என்று அப்துல் ஃபரீத் வலியுறுத்தினார்.