கொரோனா கிருமி : சிங்கையில் 6 புதிய நோய்த்தொற்றுகள், 4 உள்ளூர் நோய்த்தொற்றுகள்

சிங்கப்பூர் சுகாதார அமைச்சு இன்று நாட்டில் மேலும் ஆறு கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை உறுதிப்படுத்தியுள்ளது. முதன்முதலாக நான்கு தொற்றுநோய் நிகழ்வுகள் உள்ளூர்வாசிகளை உள்ளடக்கியது.

இது மொத்த பதிவுகளின் எண்ணிக்கையை 24 ஆக்குகிறது.

இதில் மூன்று பாதிப்புகள், சிங்கப்பூரர்கள் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுடனான சமீபத்திய தொடர்புகளைக் கொண்டிருந்தன.

நான்காவது பாதிப்பு, இந்தோனேசிய வீட்டுத் பணியாளர் சம்பந்தப்பட்டது. உள்ளூர் தொற்று நோயாளிகளில் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் அவருக்கும் தொற்றிக்கொண்டதாக MOH சமீபத்திய புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு பாதிப்புகள், ஜனவரி 30 அன்று வுஹானிலிருந்து நாடு வந்தடைந்த சிங்கப்பூர் வாசிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் கூற்றுப்படி, இவர்கள் சீனாவின் பிரதான நிலப்பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் நீண்ட நாள் தொடர்பு கொண்டதாக தெரியவருகிறது.