மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார் நடன பயிற்றுவிப்பாளர்

கோலாலம்பூரில் உள்ள ஒரு பிரபல நடன பயிற்றுவிப்பாளர் 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் இரண்டு தனித்தனியான சம்பவங்களின் போது தனது மாணவர்களை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாணவியின் உடன்பாடு மற்றும் சம்மதத்தின் பேரில், முதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அவரை விடுவித்தாலும், இரண்டாவது சம்பவம் குறித்து இன்னும் விசாரித்து வருகின்றனர்.

இரண்டு சம்பவங்களின் போதும் பயிற்றுவிப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மாணவர்களுக்காக “சிறப்பு விருந்துகளை” ஏற்பாடு செய்திருந்தார் என்று புகார் அளித்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான அந்த நடன பயிற்றுவிப்பாளர், பின்னர் ஏராளமான மதுபானம் பரிமாறி நடன பயிற்சியை நிகழ்த்துவார் என்றும், அதில் அவர் நிர்வாணமாக ஆடுவார் என்றும் தெரிவித்தனர்.

இருபது மற்றும் முப்பது வயதுகளில் இருக்கும் அப்பெண்கள், அவர்கள் உடலுறவுக்கு சம்மதிக்க முடியாத அளவுக்கு குடிபோதையில் இருந்ததாகக் கூறினர்.

அடுத்த நாள், சம்பவம் அப்பெண்களின் சம்மதத்துடன் நடந்தது என்று பயிற்றுவிப்பாளர் அவர்களை நம்ப வைப்பார் என்று அப்பெண்கள் சொன்னார்கள்.

அந்த இரவில் என்ன நடந்தாலும் அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் “அவர்கள் செல்லும் வரை மட்டுமே அவரும் செல்வார்” என்றும் பயிற்றுவிப்பாளர் இரண்டு சம்பவங்களுக்கு முன்பாக அப்பெண்களிடம் கூறியிருக்கின்றார்.

ஆனால் அந்த அறிக்கையின்படி, அப்பெண்கள் தங்கள் பயிற்றுவிப்பாளர் அனுமதியின்றி தங்களை பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தா¡ர் என்றுள்ளனர்.