கோவிட்-19 பாதிப்புகள் ஆறாயிரத்தை எட்டக்கூடும், ஆனால் அதைக் குறைக்க சுகாதார அமைச்சு தீவிரமாக செயல்படுகிறது

கோவிட்-19 பாதிப்புகள் ஆறாயிரத்தை எட்டக்கூடும், ஆனால் அதைக் குறைக்க சுகாதார அமைச்சு தீவிரமாக செயல்படுகிறது

அடுத்த மாதம் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. ஆனால் கிருமி பரவாமல் தடுப்பதற்கான அவர்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் அதைத் தடுக்க செயல்படும் என்று நம்புவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

“நாங்கள் பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதோடு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இணைக்கப்பட்டுள்ளது. தொற்றுகளைக் கண்டறிந்து நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்”.

“இந்த முயற்சிகளால், புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை குறைத்து 6,000ஐ எட்டுவதைத் தடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்”, என்றார்.