அரசாங்கத்தின் கோவிட்-19 நிதி இதுவரை RM8.129 மில்லியன் நன்கொடைகளைப் பெற்றுள்ளது.
இந்த தொகையில் இருந்து மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு உதவ RM5.8 மில்லியன் பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
“பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும்” என்று அவர் மேலும் கூறினார். அதி குறித்த விவரங்களை அமைச்சு விரைவில் அறிவிக்கும்.
8.63 மில்லியன் மலேசிய குடும்பங்களுக்கு இலவசமாக வாய் மற்றும் மூக்கு கவசங்களை விநியோகிக்கும் அரசாங்கத்தின் திட்டங்களையும் இஸ்மாயில் மீண்டும் வலியுறுத்தினார். அவற்றை அரசாங்கம் வாங்கியுள்ளதாகவும், சரக்கு வருவதற்கு காத்திருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
யார் அதனை அணிய வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
முன்னணியில் பணி புரிபவர்களைத் தவிர, பொது மக்கள் கோவிட்-19 அறிகுறிகளைக் காட்டாவிட்டால் வாய் மற்றும் மூக்கு கவசங்களை அணியத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு முன்பு கூறியிருந்தது.