இளம் வயதினரை உள்ளடக்கிய கோவிட்-19 மரணங்கள் பெரும்பாலும் தாமதமாக மருத்துவமனைக்கு வந்தவர்கள் என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகிறார்.
இன்றுவரை கிருமியுடன் தொடர்புடைய பாதிப்புகளில் இறந்தவர்களை விவரிக்கும் போது சுகாதார இயக்குநர் ஜெனரல் இதை வெளிப்படுத்தினார். இது நாட்டில் 50 உயிர்களை பறித்துள்ளது.
“34 வயது மற்றும் 27 வயது போன்ற இளம் நோயாளிகள் சம்பந்தப்பட்ட மரணங்கள் உள்ளன. ஆனால் இதன் காரணம், அவர்கள் மிகவும் தாமதமான கட்டத்தில் சிகிச்சைக்கு வந்தார்கள் என்பதே.
“அவர்கள் ஏற்கனவே கோவிட்-19 நோய்த்தொற்றின் 3 அல்லது 4 ஆம் கட்டத்தில் இருக்கும்போது வந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஏற்கனவே நிமோனியா வந்து சுவாசிக்க உதவி தேவைப்பட்டுள்ளது.
“தாமதமாக வந்த இவர்களில், எங்களால் காப்பாற்ற முடியாதவர்களும் இருக்கிறார்கள்,” என்று அவர் புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கோவிட்-19 நோய்த்தொற்றில் ஐந்து நிலைகள் இருப்பதாக நூர் ஹிஷாம் முன்பு கூறியிருந்தார். கிருமி நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்கள் முதல் (1) நிலை ஆகும் அப்போது நோயாளி நேர்மறையானவராகவும் ஆனால் எந்த அறிகுறிகளையும் காண்பிக்காமலும் இருப்பார். இரண்டாம் (2) நிலையில் நோயாளி நேர்மறையாக இருந்து மிதமான அறிகுறிகளை மட்டுமே காண்பிப்பார்.
மூன்றாம் (3) நிலையில் இருப்பவர்கள் நிமோனியாவை கொண்டிருப்பார்கள். நான்காம் (4) நிலையில் இருப்பவர்கள் ஏற்கனவே சுவாசிக்க கடினமாகவும், ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படுபவர்களாகவும் இருப்பர்.
அடுத்த ஐந்தாம் (5) நிலை, இனிமேல் சுயமாக சுவாசிக்க முடியாத நோயாளிகள், வென்டிலேட்டர்களைப் பயன்படுத்த வேண்டும்.
தாமதமான கட்டத்தில் சிகிச்சைக்காக வருவோர்களைத் தவிர, மேலும் இரண்டு ஆபத்தான குழுக்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
“நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பலர் கிருமியால் இறந்துள்ளார்கள். இது மொத்த இறப்பில் 67 சதவிகிதம் ஆகும்” என்று அவர் கூறினார்.
ஆபத்தில் உள்ள மற்ற குழு, மிக மூத்த வயதினரைச் சேர்ந்தவர்கள் என்று நூர் ஹிஷாம் மேலும் கூறினார்.
இன்று நண்பகல் நிலவரப்படி, MOH மொத்தம் 50 கோவிட்-19 இறப்புகளைப் பதிவுசெய்தது. அதே நேரத்தில் நேர்மறையான வழக்குகளின் எண்ணிக்கை 3,116 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கணிப்பில், ஏப்ரல் நடுப்பகுதியில் மலேசியா கோவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பை காணும் என்ற கருத்தை பகிர்ந்தது. அமைச்சகமும் இதே கருத்தை கொண்டுள்ளது என்றார் நூர் ஹிஷாம்.