23 மாவட்டங்கள் இப்போது சிவப்பு மண்டலமாக உள்ளன

சரவாக்கில் கோத்தா சமராஹான் மற்றும் சிலாங்கூரில் செப்பாங் ஆகியவை கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து இப்போது சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கூச்சிங்கிற்குப் பிறகு சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்ட சரவாக்கின் இரண்டாவது மாவட்டம் கோத்தா சமராஹான் ஆகும்.

இதற்கிடையில், 40க்கும் மேற்பட்ட நேர்மறை கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்த பின்னர் செப்பாங் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டு சிலாங்கூர் மாநிலத்தில் ஐந்தாவது சிவப்பு மண்டல பகுதியானது.

நேற்று நள்ளிரவு நிலவரப்படி, 23 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டன. 40க்கும் மேற்பட்ட பாதிப்புகளை பதிவு செய்யும் போது ஒரு பகுதி சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படுகிறது.

ஆரஞ்சு மண்டலம் 20 முதல் 40 பாதிப்புகளும், மஞ்சள் மண்டலம் 1-19 பாதிப்புகளும் மற்றும் பச்சை மண்டலம் பாதிப்பு ஏதும் இல்லாத பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று நண்பகல் வரை, கோத்தா சமரஹானில் 42 நேர்மறை கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி இருந்தன. சரவாக் கூச்சிங்கில் 182 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

நேற்று, சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சரவாக்கின் கூச்சிங்கில் ஒரு தேவாலய மாநாடடு தொடர்பில் நாட்டின் புதிய கோவிட்-19 பரவல்கள் சிலவற்றில் வெளியிட்டார்.

சரவாக், ககூச்சிங்கில் பிப்ரவரி 26 மற்றும் பிப்ரவரி 28 முதல் நடந்த குட் நியூஸ் பெல்லோஷிப் என்று அழைக்கப்படும் அம்மூன்று நாள் தேவாலய மாநாடு, இரண்டு இறப்புகளையும் 83 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளையும் பதிவாக்கியுள்ளது.

இதனிடையே, சரவாகில் கண்டறியப்பட்ட மற்றொரு பரவல், கடந்த மாதம் இத்தாலியில் இருந்து திரும்பிய ‘நோயாளி 1,580’ பாதிப்புடன் தொடர்புடையது. இதன் விளைவாக இதுவரை 37 நேர்மறையான வழக்குகள் உள்ளன.

மலேசியாவுக்குத் திரும்பிய பின்னர் அவர்களது சக ஊழியர்களில் ஒருவர் தன்னைத் தனிமைப்படுத்தத் தவறியதால், ஒரு குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் இறந்துள்ளனர்.