மலேசியாவில் இன்று மதிய நிலவரப்படி 122 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 100க்கும் மேற்பட்ட புதிய பதிப்புகளைக் குறிக்கிறது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இந்த புதிய பாதிப்புகளில் மொத்தம் 70 உள்நாட்டு பாதிப்புகளும், 52 இறக்குமதி பாதிப்புகளும் அடங்கியுள்ளன என்றார்.
இதுவரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,298 ஆகும். செயலில் உள்ள பாதிப்புகள் 1,780 ஆகும்.
இன்று குணப்படுத்தப்பட்ட மற்றும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 87 என்றும், இதனால் இதுவரை குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4,413 அல்லது மொத்த நோயாளிகளில் 70 சதவீதமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இன்று மேலும் இரண்டு கோவிட்-19 நோயாளிகள் இறந்துள்ளனர். இன்றுவரை பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 105 ஆகும்.

























