மலேசியாவில் 55 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 6,353 ஆக கொண்டுவந்துள்ளது.
இன்று செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 55 புதிய பாதிப்புகளில் ஏழு இறக்குமதி பாதிப்புகள் என்று தெரிவித்தார்.
மேலும் 48 புதிய பாதிப்புகள் உள்ளூர் நோய்த்தொற்றுகள் என்றும், அவற்றில் 24 தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.டி) பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து மேலும் 71 நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும், ஒட்டுமொத்த சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,484 அல்லது 70.6 சதவீதமாகக் இருப்பதாகவும் நூர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
இன்று பிற்பகல் நிலவரப்படி மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,764 ஆக உள்ளன.
இவர்களில் 28 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரிகின்றனர். அவர்களில் 13 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.
நூர் ஹிஷாம் நண்பகல் வரை புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தார். மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 105 அல்லது 1.65 சதவீதமாக உள்ளது.