பி.கே.பி.டி: பெரும்பாலான பகுதிகளில் முடிவடைந்தது

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று பெரும்பாலான பகுதிகளில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை (பி.கே.பி.டி.) நிறுத்துவதாக அறிவித்தார். ஆனால், செலாயாங்கில் சில பகுதிகளில் பி.கே.பி.டி. நீட்டிக்கப்படும். இது மே 12 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாகவும் இஸ்மாயில் கூறினார்.

செலயாங்கில் பி.கே.பி.டி.-யின் கீழ் இரண்டு பகுதிகள் உள்ளன, அதாவது செலயாங் பாரு மற்றும் பண்டார் பாரு உதாரா ஆகும்.

சமீபத்திய வளர்ச்சிகள் பின்வருமாறு:

பூசாட் பண்டார் உதாரா பி.கே.பி.டி.:

  • Parcel A: Jalan 6 / 3A, Pusat Bandar Utara, Kuala Lumpur (முடிவடைந்தது)
  • Parcel B: Jalan 6 / 3A dan 9 / 3A, Pusat Bandar Utara, Kuala Lumpur (முடிவடைந்தது)
  • Parcel C: Jalan 2 / 3A, Pusat Bandar Utara, Kuala Lumpur (நீட்டிக்கப்படும்)
  • Parcel D: Jalan 2 / 3A, Pusat Bandar Utara, Kuala Lumpur (நீட்டிக்கப்படும்)
  • Parcel E1: Taman Sri Murni Fasa 2, Jalan 1 / 2D, Kuala Lumpur (நீட்டிக்கப்படும்)
  • Parcel E2: Taman Sri Murni Fasa 1, Jalan 1 / 2D, Kuala Lumpur (நீட்டிக்கப்படும்)
  • Parcel E3: Taman Sri Murni Fasa 3, Jalan 1 / 2B, Kuala Lumpur (நீட்டிக்கப்படும்)
  • Parcel F: Taman Batu View dan Taman Batu Hampar, Kuala Lumpur (நீட்டிக்கப்படும்)

செலாயாங் பாரு பி.கே.பி.டி:

  • Zon A: Jalan Indah 3 dan Jalan Indah 5A, Selayang Indah, Gombak, Selangor (முடிவடைந்தது)
  • Zon B: Jalan Indah 21, Lembah Indah, Selayang Baru, Gombak, Selangor (முடிவடைந்தது)
  • Zon C: Jalan Besar Selayang Baru, Jalan 1 dan Jalan Indah 21, Selayang Baru, Gombak, Selangor (நீட்டிக்கப்படும்)
  • Zon D: Jalan 3, 5, 7 dan 9, Selayang Baru, Gombak, Selangor (நீட்டிக்கப்படும்)
  • Zon E: Jalan 2, 4, 6 dan 8, Selayang Baru, Gombak, Selangor (நீட்டிக்கப்படும்)
  • Zon F: Blok A, B dan C, Selayang Makmur, Gombak, Selangor (நீட்டிக்கப்படும்)

மீதமுள்ள அனைத்து சி பி.கே.பி.டி-களும் நாளை நிறுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

மெனாரா சிட்டி ஒன், சிலாங்கூர் மேன்ஷன், மலையன் மேன்ஷன் மற்றும் மஸ்ஜித் இந்தியாவின் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பி.கே.பி.டி. நேற்று முடிவடைந்தது என்றார்.

ஹுலு லங்காட்டின் சுங்கை லூயி நகரில் உள்ள மஹாத் தஹ்பிஸ் அன்-நபாவியாவில் உள்ள மதப் பள்ளியிலும் பி.கே.பி.டி. நிறுத்தப்பட்டது என்றார் இஸ்மாயில்.