“பொருளாதார அமைச்சருக்கு ஒரு பெரிய அடியாகும்” – அப்துல் ரஹ்மான்

முகிதீன் யாசின் அறிவித்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் (பி.கே.பி.பி) பின்பற்ற சில மாநிலங்களின் மறுத்துள்ளன. இது அவமானமான ஒன்று என்றும் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை என்றும் அம்னோ உறுப்பினர் அப்துல் ரஹ்மான் தஹ்லான் விவரித்தார்.

ஒன்பது மாநிலங்கள் பி.கே.பி.பி. அமுல்படுத்துவதில் இருந்து பின்வாங்கி, தங்கள் சொந்த அணுகுமுறையை பின்பற்றுவது என்ற நிலைப்பாட்டை எடுத்தபோது ‘ஏதோ தவறு இருப்பதாக’ அப்துல் ரஹ்மான் கூறினார்.

“இது பொருளாதார அமைச்சரால் செய்யப்பட வேண்டும், ஏனென்றால் இது அவரது துறையில் கீழ் உள்ளது. இதுபோன்ற நெருக்கடியைச் சமாளிக்க, அவர் பல விவாதங்களை நடத்தியிருக்க வேண்டும்; அனைவருடனும் வீடியோ கூட்டங்களை நடத்தியிருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

“இது பொருளாதார அமைச்சருக்கு ஒரு பெரிய அடியாகும்” என்றார்.

“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுக்குப் பிறகு வணிகத்தைத் தொடங்க ஒருங்கிணைக்க முடியாததற்கு பொருளாதார அமைச்சருக்கு (அஸ்மின்) ஒரு பெரிய அடியாகத் தெரிகிறது.”

“சங்கடமாகவும் அவமானமாகவும் இருக்கிறது, இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை” என்று அவர் கூறினார்.
பி.என் சமீபத்தில் அரசாங்கத்தை அமைத்த பின்னர் முகிதீனால் நியமிக்கப்பட்ட மூத்த அமைச்சர்களில் அஸ்மினும் ஒருவர். இவர் பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர்.

“பி.கே.பி.பி. அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அஸ்மின் மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தவறிவிட்டார். இது, எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகும் – அவருக்கும், அரசாங்கத்திற்கும் தான்” என்று அவர் கூறினார்.

அஸ்மின் சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி புசாராக இருந்துள்ளதால் இது போன்ற விடயங்களை அவர் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றார் அப்துல் ரஹ்மான்.

“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் தளர்த்துவது என்பது ஒரு பெரிய படியாகும். அஸ்மின் முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்றார்.