பாதிக்கும் மேற்பட்ட கெடா பெர்சத்து தலைவர்கள் டாக்டர் மகாதீருக்கு ஆதரவு

கட்சியின் தலைமை நெருக்கடியை தீர்க்கும் நம்பிக்கையில் 15 கெடா பெர்சத்து கட்சித் தலைவர்களில் எட்டு பேர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

மாநிலத் தலைவராக முன்னாள் மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீருக்கும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக கெடா பெர்சத்து துணை மாநிலத் தலைவர் அனுவார் அப்துல் ஹமீட் தெரிவித்தார். அந்த எட்டு பிரிவு தலைவர்களின் ஆதரவும் விசுவாசமும் “உண்மையானது” என்று அனுவார் கூறினார்.

பெர்சத்து கட்சியின் அரசியலமைப்பின் கீழ், மகாதீர் மற்றும் முகிரீஸின் தலைமை, மாநில மற்றும் மத்திய மட்டத்தில் சட்டபூர்வமானது என்று அனுவார் மலேசியாகினியிடம் கூறினார்.

இருப்பினும், மகாதிர் மற்றும் முக்ரிஸுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்ததன் மூலம் மட்டும், பெர்சத்து கட்சியில் உள்ள பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்று தனக்குத் தெரியவில்லை என்று அனுவார் கூறினார்.

“(நிலைமை) கடினமாக உள்ளது. சர்ச்சையைத் தீர்க்க மீண்டும் சங்கங்களின் பதிவாளர் (ROS) அல்லது நீதிமன்றத்திற்குத் தான் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.