இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை?

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகள் வாங்கவுள்ள இந்தியா, பொருளாதார தடையை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து, 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, ‘எஸ்-400’ ரக அதிநவீன ஏவுகணைகளை வாங்க, கடந்த ஆண்டு இந்தியா ஒப்பந்தம் போட்டது. இதற்கு, முன்பணமாக, 6,000 கோடி ரூபாய் (800 மில்லியன் டாலர்), ரஷ்யாவுக்கு கொடுக்கப்பட்டது. இதனால், அமெரிக்கா ஆத்திரமடைந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க துணை அமைச்சர் ஆலிஸ் வெல்ஸ் கூறியதாவது: அமெரிக்க பொருளாதார தடைகள் சட்டமான கேட்சா சட்டப்படி, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து, ராணுவ தளவாடங்கள் வாங்குகிற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது. ராணுவ தொழில்நுட்ப விவகாரங்களில், இந்தியா சில வாக்குறுதிகளை கடைபிடிக்கவில்லை எனில், பொருளாதார தடையை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எங்களிடம் சிறப்பான தொழில்நுட்பங்களும், தளவாடங்களும் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar