ஜூன் 1 முதல் மாநில எல்லை தாண்ட நிபந்தனையுடனான அனுமதி – இஸ்மாயில் சப்ரி

மாநிலத்தின் எல்லை தாண்டிய பயணத் தடையை திரும்பப் பெறுவது குறித்து நிபந்தனை விதிக்கப்படும் என்று மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்துள்ளார்.

ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி, வேலை, மருத்துவ மற்றும் அவசர சேவைகளுக்காக மாநில எல்லை தாண்டும் நடவடிக்கைகள் மீண்டும் அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது வாழ்க்கைத் துணைவர்களைப் பிரிந்திருந்தவர்களும் இப்போது மாநில எல்லை கடக்க அனுமதிக்கப்படுவார்கள்.