தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேறினார் அசார்

அசார் அஜீசான் ஹாருன், ஜூன் 29 அன்று தேர்தல் ஆணைத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியதை தேர்தல் ஆணையம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் தகவல் தொடர்பு பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷரோம் தலைவரின் கடமைகளை நிறைவேற்றுவார் என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசியலமைப்பின் 114 (7)வது பிரிவின்படி, புதிய தேர்தல் ஆணையத் தலைவரை நியமிக்கும் வரை அஸ்மி ஷரோம் அந்த பணியை மேற்கொள்வார்.

நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக அசார் பெயரிடப்படுவார் என்ற ஊகங்களை இந்த அறிக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.