அன்வார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் இப்ராஹிம் (பி.எச் – போர்ட் டிக்சன்) தேர்ந்தெடுக்கப்படுவதாக பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் முகமட் ஆரிஃப் எம்.டி யூசோப் முறையாக அறிவித்தார்.

“நான் பெற்ற கருத்தின்படி, போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இப்ராஹிமை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதில் திருப்தி அடைகிறேன் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.”

“மகிழ்ச்சி, போர்ட் டிக்சன் YB அவர்களே” என்று அவர் கூறினார்.

கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கான அமர்வு புதிய விதிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆரிஃப் கூறினார்.

“இதேபோல், உறுப்பினர்களும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், எப்போதும் கூடல் இடைவெளிக்கு கட்டுப்பட வேண்டும்.”

“மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட 87 உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் நிச்சயமாக அதிக ஆபத்தில் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

கூடல் இடைவெளியை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நிலையான நடைமுறை (எஸ்ஓபி) பற்றியும் அவர் விளக்கினார். இதன்படி, 174 உறுப்பினர்கள் மட்டுமே அதன் பிரதான மண்டபத்தில் அமர அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் பொது இடத்தில் அமர்வர். எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் சபாநாயகரின் இடது பக்கத்தில் உள்ள அதிகாரிகளின் இருக்கைகளில், பின்புறத்தில் அமர்ந்தனர்.