கோவிட் 19 : 660 புதியத் தொற்றுகள், மூன்று இலக்கங்களில் ஐ.சி.யூ. பாதிப்புகள்

இன்று எட்டாவது நாளாக, மலேசியாவில், தொடர்ந்து கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்று மதியம் வரையில், 660 நேர்வுகள் பதிவாகியுள்ளன.

தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 101 நோயாளிகள் உள்ள நிலையில், 32 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது.

443 சம்பவப் பதிவுகளுடன் சபா முன்னிலையில் உள்ளது, சிலாங்கூரில் 76, கெடாவில் 60, பினாங்கில் 23, லாபுவானில் 19, பேராக்கில் 16, ஜொகூரில் 10, கோலாலம்பூரில் 10, நெகிரி செம்பிலானில் 2 மற்றும் பஹாங்கில் 1 எனப் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இன்று 4 மரணங்கள் சம்பவித்துள்ளன :-

சண்டகான் கேண்ட் மருத்துவமனை – 84 வயது மலேசியப் பெண் & 83 மலேசிய ஆண் ஒருவர்

செம்போர்ணா மருத்துவமனை – 36 வயது வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர்

தாவாவ் மருத்துவமனை – 59 வயது மலேசிய ஆண்

6 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.