சுயதொழில் செய்பவர்கள், மாவட்ட, மாநில எல்லைகளைக் கடக்க காவல்துறைக்கு விண்ணப்பிக்கலாம்

சுயதொழில் செய்பவர்கள் நிபந்தனைக்குட்பட்ட இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி) போது, மாவட்டம் அல்லது மாநிலத்திற்கு வெளியே செல்ல விரும்பினால், காவல் நிலையத்தில் அனுமதி கடிதத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மூத்த அமைச்சர் (தற்காப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப், போலிசாரின் அனுமதி கடிதம், சாலை தடைகளில் தடுத்து வைக்கப்படுவதைத் தவிர்க்க உதவும் என்றார்.

“எனவே, அவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று, ஓர் அனுமதி கடிதத்தைப் பெற வேண்டும். அவர்களுக்கு முதலாளி இல்லை என்பது எனக்குப் புரிகிறது. ஆக, அவர்கலின் பணியிடத்தை யாராலும் உறுதிசெய்ய முடியாது,” என்று கோலாலம்பூரில், இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

  • பெர்னாமா