‘அவசரகாலப் பிரகடனத்தால் மட்டுமே தேர்தலை ஒத்திவைக்க முடியும்’

பத்து சாபி இடைத்தேர்தலும் (பி.ஆர்.கே) சரவாக் மாநிலத் தேர்தலும் நாட்டின் கோவிட் -19 நெருக்கடியை அதிகப்படுத்தும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் கவலை தெரிவித்தார்.

இருப்பினும், இடங்கள் காலியாக இருந்தால் அல்லது சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டால், தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசியலமைப்பு மற்றும் சரவாக் மாநில அரசியலமைப்பு கூறுகின்றன என்று முஹைடின் கூறினார்.

“இது ஒரு விளையாட்டு விஷயம் அல்ல, ஒரு தீவிரமான விஷயம். எனவே, நீங்கள் என்னைக் கேட்டால், இந்த நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது.

“ஆனால் என்ன செய்ய முடியும், மத்திய அரசியலமைப்பில் இருப்பதால், நாம் தேர்தல்களை நடத்தியாக வேண்டும்.

“பத்து சாபி மற்றும் சரவாக் ஆகியவற்றில் மத்திய அரசியலமைப்பின் 150-வது பிரிவின் கீழ், அவசரநிலை அறிவிக்கப்பட்டால், கோவிட் -19 முடியும் வரை இந்த இரண்டு தேர்தல்களையும் நாம் ஒத்திவைக்க முடியும்.

“அப்படி தேர்தலை ஒத்திவைக்க முடியாமல் போனால், பத்து சாபி மற்றும் சரவாக் மக்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால், கவனமாக இருங்கள், சகோதர சகோதரிகளே உங்களை நீங்களே பாதுகாத்துகொள்ளுங்கள்.

“தேர்தல்கள் நடைபெறும் போது, செந்தர இயங்குதல் முறையை முழு ஒழுக்கத்துடன் கடைப்பிடியுங்கள்,” என்று அவர், இன்று தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பான சிறப்பு செய்தியில் கூறினார்.