15-வது பொதுத் தேர்தலில் (ஜி.இ.) பெர்சத்துவுடன் ஒத்துழைப்பது குறித்து முடிவு செய்ய விரும்பும் சில அம்னோ தலைவர்களின் அறிக்கைகள், ஜொகூரின் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சாபியானை ஆச்சரியப்படுத்தவில்லை.
அரசாங்கத்தில், பெர்சத்துவுடன் இருந்தபோது அம்னோ தலைவர்கள் நேர்மையற்று இருந்ததாக அவர் கூறினார்.
தேசியக் கூட்டணி அரசாங்கத்தில், உயர்பதவிகளை எதிர்பார்த்தே அம்னோ தலைவர்கள் அதில் இணைந்தனர் என்று ஆயேர் ஈத்தாம் தொகுதியின் பெர்சத்து தலைவரான அவர் தெரிவித்தார்.
கடைசி ஜி.இ.யில் தோற்று, விரும்பிய பதவியைப் பெறாத அம்னோ தலைவர்களும் இப்போது கூப்பாடு போடுகின்ற கூட்டத்தில் உள்ளனர் என்று கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினருமான ஒஸ்மான் கூறினார்.
“அம்னோவில் பலர் நேர்மையற்றவர்கள், பெர்சத்துவுடன் மட்டுமல்ல, சமூகத்துடனும் நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள்.
“அவரது நோக்கம் உண்மையில் மக்களுக்கு உதவுவது என்றால், அரசாங்கத்திற்கு வெளியே இருந்தாலும் பெரிய பதவிகளை வகிக்காவிட்டாலும் அவர்களால் அவ்வாறு செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.