கோவிட் -19 தடுப்பூசி சோதனைக்காக, 3,000 தன்னார்வலர்கள் தேவை

கோவிட் -19 தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த மருத்துவ பரிசோதனைகளைச் செயல்படுத்த, மலேசிய சுகாதார அமைச்சிற்கு 3,000 தன்னார்வலர்கள் தேவைபடுகிறது.

மலேசியச் சுகாதார அமைச்சின் அறிவிப்பின் படி, குறைந்தது 18 வயதுடைய எவரும் தன்னார்வலராக முன்வரலாம்.

சீன மருத்துவ அறிவியல் அகாடமியின் மருத்துவ உயிரியல் மருத்துவ நிறுவனம் (IMBCAMS) உருவாக்கியுள்ளத் தடுப்பூசிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகளின் மூன்றாம் கட்டத்தில் அவர்கள் பங்கேற்பார்கள்.

நேற்றிரவு, சமூக ஊடகங்களில் சுகாதார அமைச்சு பகிர்ந்த சுவரொட்டியின் கூற்றுப்படி, கோவிட் -19 தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியைத் தேடுவதில், தன்னார்வலர்கள் பங்களிக்க வேண்டும்.

இப்பரிசோதனை ஜனவரி 21-ம் தேதி தொடங்கும்.

ஆர்வமுள்ள எவரும் நியமிக்கப்பட்ட ஒன்பது மருத்துவமனைகளைத் தொடர்பு கொள்ளலாம். அவை :-

  • சுங்கை பூலோ மருத்துவமனை, சிலாங்கூர் (011-1004 5343)
  • அம்பாங் மருத்துவமனை, சிலாங்கூர் (016-728 6617)
  • இராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை மருத்துவமனை, ஈப்போ பேராக் (011-6331 1654)
  • தைப்பிங் மருத்துவமனை, பேராக் (019-854 6373)
  • பினாங்கு மருத்துவமனை, ஜார்ஜ் டவுன் (016-521 3055)
  • செபராங் ஜெயா மருத்துவமனை, பினாங்கு (014-906 5518)
  • சுல்தானா பஹியா மருத்துவமனை, அலோர் ஸ்டார், கெடா (019-554 4976)
  • சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனை, சுங்கை பட்டானி, கெடா (017-793 1938)
  • பொது மருத்துவமனை, கூச்சிங், சரவாக் (012-310 8108)

சுகாதார அமைச்சின் சுவரொட்டியில், தன்னார்வலர்கள் கோவிட் -19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது, வீக்கம், வலி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவுக்கும் பரிந்துரைக்கப்பட்ட பொருளுடன், இரண்டு மருந்தளவுகள்  14 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படும். ஆய்விற்கான சிறந்த நடைமுறைகளைப் போலவே, தன்னார்வலர்களுக்கோ அல்லது அவர்களது ஊழியர்களுக்கோ ஒவ்வொரு தன்னார்வலரும் எதைப் பெறுகிறார் என்பது தெரியாது, இதனால் முடிவுகள் முற்றிலும் நடுநிலையானவை.

முதல் மருந்தளவு முதல், இரண்டாவது மருந்தளவுக்கு 28 நாட்கள் வரை தன்னார்வலர்களின் பாதுகாப்பு பிரச்சினைகள் கவனிக்கப்படும்.

கூடுதலாக, தடுப்பூசிக்குப் பிறகு, கடுமையான பாதக விளைவுகளின் அறிகுறிகளைக் காண பங்கேற்பாளர்கள் இரண்டாவது மருந்தளவுக்குப் பிறகு 12 மாதங்கள் வரை கண்காணிக்கப்படுவார்கள்.

அவர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு, கோவிட் -19 அறிகுறிகள் அல்லது நேர்மறை சோதனை முடிவுகள் ஆகிய இரண்டும் கண்காணிக்கப்படும்.