கோவிட் 19 : இன்று 3,631 புதிய நேர்வுகள், 14 மரணங்கள், அவசரப் பிரிவில் 238 நோயாளிகள்

நாட்டில் இன்று, 3,631 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் (48 விழுக்காடு), சபா (14.5 விழுக்காடு), ஜொகூர் (10.1 விழுக்காடு) எனப் பதிவாகியுள்ளன.

2,944 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 238 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 96 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (1,199), சபா (526), கோலாலம்பூர் (521), ஜொகூர் (368), சரவாக் (156), நெகிரி செம்பிலான் (139), பேராக் (135), கிளந்தான் (133), பினாங்கு (124), மலாக்கா (122), கெடா (114), திரெங்கானு (33), பஹாங் (31), புத்ராஜெயா (26), லாபுவான் (1).

இன்று, 14 பேர் இந்நோயிக்குப் பலியாகியுள்ளனர்.

சிலாங்கூர் (7) – செர்டாங் மருத்துவமனையில் ஐவர், சுங்கை பூலோ மருத்துவமனை மற்றும் செலாயாங் மருத்துவமனையில் தலா ஒருவர்; ஜொகூர் (2) – குளுவாங் மருத்துவமனையிலும், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையிலும் தலா ஒருவர்; பேராக் (1) – தைப்பிங் மருத்துவமனையில் ஒருவர்; கெடா (1) – அலோர்ஸ்டார் மருத்துவமனையில் ஒருவர்;  கிளந்தான் (1) – கோத்தாபாரு, இராஜா பெரும்புவான் ஜைனாப் மருத்துவமனையில் ஒருவர்; லாபுவான் (1) – பொது மருத்துவமனையில் ஒருவர்; சபா (1) – சிபு மருத்துவமனையில் ஒருவர். ஆக, இதுவரை நாட்டில் 619 பேர் இந்நோயின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

மேலும் இன்று 9 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன :-

ஜொகூர் (3) – ஜாலான் தாருக்கா பணியிடத் திரளை (ஜொகூர் பாரு), ஶ்ரீ காடிங் பணியிடத் திரளை (பத்து பஹாட்), தாமான் சாயோங் பினாங் (கோத்த திங்கி); கோலாலம்பூர் (1) – ஜாலான் மஸ்ஜிட் பணியிடத் திரளை (லெம்பா பந்தாய் & கெப்போங்), சிலாங்கூர் (1) – ஜாலான் சுங்கை ஜெலோக் தடுப்பு முகாம் திரளை (உலு லங்காட்); திரெங்கானு (1) – கெபோர் ஆயேர் பணியிடத் திரளை (கோல திரெங்கானு, செட்லு, கோல நெருஸ் & டுங்குன்); பஹாங் & சிலாங்கூர் (1) – ரந்தாவ் செம்பாக்கா திரளை (மாரான் & உலு லங்காட்); சரவாக் (1) – ராக்குட் திரளை (மிரி); கெடா (1) – குப்பாங் திரளை (பாலிங்).