இன்று ஆக அதிக நோய்த்தொற்று, நோயிலிருந்து மீண்டவர் எண்ணிக்கை பதிவானது

கோவிட் 19 | நாட்டில் இன்று, 4,275 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளையில், 4,313 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆக, இன்று இவை இரண்டுமே ஆக அதிக தினசரி எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன.

இதற்கிடையில், இன்று அவசரப் பிரிவில் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 103 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மேலும் இன்று 7 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (1,421), கோலாலம்பூர் (548), சபா (498), ஜொகூர் (466), மலாக்கா (278), பேராக் (208), சரவாக் (193), பினாங்கு (162), திரெங்கானு (131), நெகிரி செம்பிலான் (108), கெடா (105), கிளந்தான் (78), பஹாங் (75), புத்ராஜெயா (35), பெர்லிஸ் (7), லாபுவான் (3).

மேலும் இன்று 11 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன :-

ஜொகூர் (3) – ஜாலான் சங்கே பணியிடத் திரளை (ஜொகூர் பாரு), பெர்சியாரான் தஞ்சோங் பணியிடத் திரளை (ஜொகூர் பாரு), ஜாலான் தீமா டுவா பணியிடத் திரளை (ஜொகூர் பாரு); கோலாலம்பூர் (2) – கீலாங் செதாப்பாக் பணியிடத் திரளை (தித்திவங்சா), ஜாலான் வங்சா கட்டுமானத் தளத் திரளை (தித்திவங்சா); மலாக்கா (1) – தெம்போக் சுங்கை ஊடா தடுப்பு முகாம் திரளை (மலாக்கா தெங்கா), பாலி ரெசிடன்ஸ் கட்டுமானத்தளத் திரளை (மலாக்கா தெங்கா & அலோர் காஜா); சிலாங்கூர் (1) – லெபோ புத்ரி கட்டுமானத்தளத் திரளை (பெட்டாலிங்); திரெங்கானு (2) – கம்போங் புக்கிட் பியா திரளை (உலு திரெங்கானு, கோல திரெங்கானு, பெசுட் & கெமாமான்), கம்போங் குந்தோங் லுவார் திரளை (செத்தியூ & கோல நெருஸ்); சபா (1) – கம்போங் பொம்பாலாய் பணியிடத் திரளை (தாவாவ் & காலாபாகான்).