மாவட்டம், மாநில எல்லைகளைக் கடக்க கிளாந்தான் காவல்துறை 52,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி

மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமல்படுத்தப்பட்டதை அடுத்து, ஜனவரி 16 முதல், 52,000-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில எல்லைகளைக் கடப்பதற்கான விண்ணப்ப அனுமதி கடிதங்களுக்குக் கிளாந்தான் காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

கிளாந்தான் காவல்துறைத் தலைவர், டி.சி.பி. ஷாஃபியன் மாமாட், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் முதலாளிகள் இல்லாத அனுமதிக்கப்பட்ட தொழிற்துறை சார்ந்தவர்களுக்கு, அனுமதி கடிதங்களை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“இது தவிர, சாலைத் தடைகள் 19 இடங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன, இது இதுவரை போதுமானதாக உள்ளது, இருப்பினும் நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பை மேம்படுத்த, கண்காணிப்புக் குழுக்களாகக் காவல்துறையினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது, என்றார் அவர்.

இதற்கிடையில், பி.கே.பி. காலம் முழுவதும், செந்தர இயங்குதல் நடைமுறைகளைப் (எஸ்ஓபி) பின்பற்றும் மக்களின் ஒத்துழைப்பில் தனது தரப்பு திருப்தி அடைவதாகவும் ஷாஃபியன் கூறினார்.