இன்று 3,384 புதிய நேர்வுகள், 13 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,384 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 13 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இன்று 3,774 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 259 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 122 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1082), ஜொகூர் (777), கோலாலம்பூர் (435), கெடா (228), சரவாக் (184), பினாங்கு (144), சபா (142), மலாக்கா (101), நெகிரி செம்பிலான் (89), பேராக் (82), கிளாந்தான் (48), திரெங்கானு (26), பஹாங் (21), லாபுவான் (14), புத்ராஜெயா (7), பெர்லிஸ் (4).

மேலும் இன்று 17 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 13 பணியிடம் சார்ந்தவை, 2 சமூகம் சார்ந்த திரளைகளும், ஒரு தடுப்புக்காவல் மையத் திரளையும் பதிவாகியுள்ளன.

அவற்றுள் 6 ஜொகூரிலும், 3 கோலாலம்பூரிலும், 3 சிலாங்கூரிலும், கெடாவில் இரண்டும், சரவாக், மலாக்கா மற்றும் பேராக்கில் தலா ஒன்றுமாகப் பதிவாகியுள்ளன.