மலேசியாகினி அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் 2021 சீனப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
இன்று எருது ஆண்டின் வருகை. முந்தைய எலி ஆண்டு, மலேசியர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒரு கடினமான ஆண்டாக இருந்தது.
இந்தப் புதிய ஆண்டில், கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போரில் நாடும் உலகமும் வெல்லும் என்று நம்புகிறோம். நாம் அனைவரும் தொடர்ந்து தனிப்பட்ட உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பேணுவதோடு, செந்தர இயங்குதல் நடைமுறைகளையும் (எஸ்.ஓ.பி.) கடைப்பிடிக்க வேண்டும்.
சிறந்த எதிர்காலத்திற்காக, கடந்த ஆண்டு உங்களுக்குச் சேவை செய்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.