இன்று 2,720 புதிய நோய்த்தொற்றுகள், 8 மரணங்கள்

கோவிட் 19 | இன்று பிற்பகல் நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 2,720 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்,  எட்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன, இது தொற்றுநோயின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை 983 ஆக உயர்த்தியது.

இன்று 5,718 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 118 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1300), ஜொகூர் (451), கோலாலம்பூர் (318), சரவாக் (193), சபா (132), பினாங்கு (72), பேராக் (69), நெகிரி செம்பிலான் (64), கெடா (38), திரெங்கானு (26), பஹாங் (19), கிளாந்தான் (17), மலாக்கா (14), புத்ராஜெயா (6), லாபுவான் (1).

மேலும் இன்று 19 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 14 பணியிடம் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.