முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தாமஸ் எழுதிய நினைவுக் குறிப்பு புத்தகத்தின் வெளியீட்டாளர் மீதான விசாரணையைத் தொடர்ந்து, கெராக்புடாயா நிறுவனத்திடமிருந்து இரண்டு கணினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாகினியிடம் பேசிய கெராக்புடாயா நிறுவனர் சோங் தோன் சின், என் கதை : தரிசில் தேடும் நீதி (My Story: Justice in the Wilderness) என்ற தலைப்பிலான புத்தகத்திற்கு எதிராக விசாரணை நடந்து வருவதை உறுதிப்படுத்தினார்.
“இன்று காலை 11 மணிக்கு, இரண்டு காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக கணினிகளைப் பறிமுதல் செய்தனர்,” என்று சோங் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக கெராக்புடாயா பதிப்பகத்தை விசாரிப்பது இது மூன்றாவது முறையாகும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், எந்தப் புத்தகங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை, ஆனால் அதிகாரிகள் இதற்கு முன்னர் புத்தகங்களின் நகல்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.