அகோங் : அவசர காலங்களில் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும்

பிரதமரின் ஆலோசனையின் பேரில், அவரது மாட்சிமைக்குப் பொருத்தமானதாகக் கருதப்படும் ஒரு தேதியில் அமல்படுத்தப்படும் அவசர காலங்களில், நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் என்று மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல் முஸ்தபா பில்லா ஷா சுல்தான் அஹ்மத் ஷா நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“இந்த விடயம் அவசரகாலக் கட்டளைச் சட்டத்தின் (தேவையான அதிகாரங்கள்) 2021-இன் 14 (1) (b) துணைப் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

“அதில், அவசரகாலப் பிரகடனத்தின் போது, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதைத் தடுப்பது பற்றியக் கருத்து தவறானது.

நேற்று, இஸ்தானா நெகாராவில் மேலவை சபாநாயகர் டாக்டர் ரைஸ் யாத்திம் மற்றும் மக்களவை சபாநாயகர் அசார் அஸிஸான் ஹருன் ஆகியோரை மாமன்னர் சந்தித்ததாக அரண்மனை பேச்சாளர் அஹ்மட் ஃபாடில் சம்சுடின் தெரிவித்தார்.

“இந்த அமர்வில், அரசியலமைப்பு மேலாதிக்கத்தின் கொள்கையின் அடிப்படையில், ஒரு ஜனநாயக அமைப்பைக் கடைப்பிடிக்கும் நாடான மலேசியா, நாட்டின் நிர்வாகத்தின் ஒவ்வொரு பிரிவையும் நிறைவேற்றவும், நீதித்துறை அல்லது நாடாளுமன்றத்தின் கொள்கைக்குக் கட்டுப்படவும் வேண்டும் என்பதை மாமன்னர் வலியுறுத்தினார்,” என்றும் ஓர் அறிக்கையில் இஸ்தானா நெகாரா கூறியது.