இ.பி.ஃப். 5.2% ஈவுத்தொகை அறிவிப்பு, மொத்த தொகை RM47.64 பில்லியன்

ஊழியர் சேமநிதி வாரியம் (இ.பி.எஃப்.), 5.2 விழுக்காடு, RM42.88 பில்லியன் ஈவுத்தொகையைச் ‘சிம்பானான் கொன்வென்ஷனல்’ –க்கும் (Simpanan Konvensional), 4.9 விழுக்காடு, RM4.76 பில்லியனை ‘சிம்பானான் ஷரியா’வுக்கும் (Simpanan Shariah) செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, 2020-ஆம் ஆண்டிற்கான மொத்தத் தொகை RM47.64 பில்லியன் என்று இபிஎஃப் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“பணவீக்கத்தைச் சரிசெய்த பிறகு, சராசரியாக ஐந்தாண்டு உண்மையான ஈவுத்தொகை சிம்பானான் கொன்வென்ஷனலுக்கு 4.62 விழுக்காடு மற்றும் சிம்பானான் ஷரியாவுக்கு 4.32 விழுக்காடு.

“இபிஎஃப் அதன் மூலோபாய இலக்கை மீறி, குறைந்தது இரண்டு விழுக்காடு உண்மையான ஈவுத்தொகையைச் சராசரியாக ஐந்தாண்டு அடிப்படையில் அறிவிக்கிறது,” என்று அது சொன்னது.

2020-ஆம் ஆண்டிற்கான 5.2 விழுக்காடு ஈவுத்தொகை, கடந்த ஆண்டு 5.45 விழுக்காட்டைவிட சற்று குறைவு.

– பெர்னாமா