கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், பிரதமர், மலேசிய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் (இசி) ஆகியவற்றுக்கு எதிரான இளம் வாக்காளர் சங்கத்தின் (வாக்கு18) நீதி மறுஆய்வு விசாரணையை மே 6-ஆம் தேதிக்கு நிர்ணயித்துள்ளது.
சட்டத்துறை தலைவரின் அலுவலகம் ஆரம்ப ஆட்சேபனைகளுக்குப் பதிலளிக்க வாக்கு18-க்கு வாய்ப்பு வழங்குவதற்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
வாக்கு18-இன் கூற்றுப்படி, சட்டத்துறை தலைவரின் அலுவலகம், சங்கத்தின் எதிர்ப்பு விண்ணப்பம், “தானியங்கி வாக்காளர் பதிவு செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் அனைத்து சட்டங்களும் விதிமுறைகளும் மாற்றப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது” என்று கூறியுள்ளது.
“சட்டத்துறை தலைவரின் நிலைப்பாடு முரணானது என்றும், வாக்களிக்கும் வயது வரம்பைக் குறைப்பைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்த அதனைப் பயன்படுத்த முடியாது என்றும் வாக்கு18 வலியுறுத்துகிறது.
“கூட்டாட்சி அரசியலமைப்பின் 119 (1) (a) பிரிவின் திருத்தத்தை அமல்படுத்துவதை முதலில் செய்ய வேண்டும் என்பதே வாக்கு18-இன் கருத்தாகும்.
“அரசியலமைப்பு (திருத்தம்) சட்டம் 2019-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கூட்டாட்சி அரசியலமைப்பின் 119-வது பிரிவுக்கான திருத்தங்களை வாக்கு18 உள்ளடக்கியது,” என்றும் அது கூறியுள்ளது.