மேலவை உறுப்பினர்களாக நால்வர் பதவியேற்றனர்

இன்று, மேலவை சபாநாயகர் டாக்டர் ரைஸ் யாத்திம் முன்னிலையில், நால்வர் மேலவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.

மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின், ஜோன் அம்ப்ரோஸ், தியோ எங் தீ @ தியோ கோக் சீ மற்றும் போபி ஆ ஃபாங் சுவான் ஆகியோர் அந்த நால்வரும் ஆவர்.

மாமன்னரால் இரண்டாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்ட மேலவை உறுப்பினர்கள் ராட்ஸி, ஜூலை 17 முதல் ஜூலை 16, 2024 வரையிலும், ஜோன் ஆம்ப்ரோஸ் ஜனவரி 16 முதல் ஜனவரி 15, 2024 வரையிலும் மற்றும் தியோ இன்று ஜூலை 18 முதல் 2024 வரையிலும் மேலவையில் இருப்பர்.

இதற்கிடையில், போபியின் சபா மாநிலச் சட்டமன்றத்தின் முதல் நியமனம், ஜனவரி 5 முதல் ஜனவரி 4, 2024 வரையில் நடைமுறையில் இருக்கும்.

கோலாலம்பூரில், நாடாளுமன்றத்தின் பிரதான பகுதியான டேவான் நெகாராவில் நடைபெற்ற விழாவில், அந்நால்வரும் செனட்டர்களாகப் பதவியேற்றனர்.

மேலவையின் அந்த நான்கு உறுப்பினர்களின் நியமனத்தை வரவேற்ற ரைஸ், தங்களுக்கு வழங்கப்படும் அனைத்து பொறுப்புகளிலும் அவர்கள் சிறந்து விளங்க வேண்டுமெனத் தனது உரையின் போது நினைவூட்டினார்.

மக்களவையின் சிறப்புக் கூட்டம் ஜூலை 26 முதல் 29 மற்றும் ஆகஸ்ட்ந்ம் தேதியும் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மேலவையின் சிறப்புக் கூட்டம் ஆகஸ்ட் 3 முதல் 5 வரையில் நடைபெறும்.

  • பெர்னாமா