பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின், நாடாளுமன்ற நடவடிக்கை கேலிக்கூத்து உருவாக்க உள்ளார். நிலையான உத்தரவுகள் 11 (3) (எஸ்.ஓ) இன் படி ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தி எந்தவொரு விவாதங்களுக்கு வாய்ப்பு வழங்க மறுப்பது வேடிக்கையாகவும் உள்ளது என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் சாடினார்.
அவசரகால நிலை 2021 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட போதிலும், பிப்ரவரி 24 அன்று, அவசர காலத்தின் போது நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று மாமன்னர் உத்தரவை பிறப்பித்தார்.
பின்னர் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தினார். மத்திய அரசியலமைப்பு அவசரகாலத்தில் நாடாளுமன்ற கூட்ட அனுமதிக்கிறது
முஹைதீன் இந்த நிலையான உத்தரவின் கீழ் நாடாளுமன்றத்தை ஏன் தேர்வு செய்தார், அவர் சாதாரண செயல்முறையின் கீழ் இதைச் செய்ய முடியும் என்பதை சுட்டிக்காட்டிப் பேசினார்.
முஹைதீன் செய்திருப்பது நாடாளுமன்றத்தை ஊமையாகவும் இழிவுபடுத்தப்பட்ட வடிவத்தையும் உருவாக்க நினைக்கிறார்.
சிறப்பு அமர்வுக்கு என்ன தேவை? அமைச்சர்கள் எஸ்ஓவின் கீழ் மந்திரி அறிக்கைகளை வெளியிடுவது மற்றும் வாக்களிக்கப்படாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்ப அனுமதிப்பது முன்னோடியில்லாதது.
பிரதமர் எடுத்த இந்த செயல்முறை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பதாகும்.
பிரதமருக்கு பெரும்பான்மை இருந்தால், அவர் நாடாளுமன்ற செயல்பாட்டில் தனது எண்ணிக்கையின் ஆதாரத்தை தைரியமாக காட்ட வேண்டும். ஆனால் முஹைதீன் தைரியும் உண்டா?
எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் மற்றும் பெருவாஸ் பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கோ��