கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,988 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கை விட அதிகமான நேர்வுகள், சரவாக்கிலும் சபாவிலும் பதிவாகியுள்ளன.
சரவாக்கிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முழு தடுப்பூசி பெற்ற நிலையில், சபாவில் 28.8 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும், இன்று 249 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 17,191- ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 23,473 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,001 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 470 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (4,073), சரவாக் (2,992), கெடா (2,455), சபா (2,329), ஜொகூர் (2,145), பினாங்கு (1,600), கிளந்தான் (1,247), பேராக் (990), திரெங்கானு (987), கோலாலம்பூர் (731), பகாங் (599), மலாக்கா (407), நெகிரி செம்பிலான் (301), பெர்லிஸ் (90), புத்ராஜெயா (37), லாபுவான் (5).