கடந்த 24 மணி நேர நேரத்தில், 19,378 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை சபா மற்றும் சரவாக் மாநிலங்களைவிட குறைவாக இருந்தன.
கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலானில் மிகக் குறைந்த புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன. இரண்டிலும் தடுப்பூசி விகிதம் சராசரி விகிதத்தை விட அதிகமாக இருந்தது.
மேலும், இன்று 330 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 17,521- ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 22,399 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 975 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 463 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் – 3,613 (615,392), சரவாக் – 2,464 (124,428, சபா – 2,404 (155,006), ஜொகூர் – 2,331 (145,116), பினாங்கு – 1,726 (91,579), கெடா – 1,470 (104,552), பேராக் – 1,389 (71,371), கிளந்தான் – 1,356 (81,633), கோலாலம்பூர் – 740 (175,283), பகாங் – 559 (46,006), மலாக்கா – 399 (49,673), திரெங்கானு – 532 (35,517), நெகிரி செம்பிலான் – 270 (92,338), பெர்லிஸ் – 80 (2,157), புத்ராஜெயா – 41 (5,510), லாபுவான் – 4 (9,821).
மேலும் இன்று, 34 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 16 சமூகப் பரவலுடன் தொடர்புடையது, 20 பணியிடத் திரளைகள் ஆகும்.