சுகாதார அமைச்சு இன்று 19,057 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது.
இன்று 362 பேர் உயிரிழந்துள்ளனர். இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 17,883- ஆக உயர்த்தியுள்ளது.
ஆகஸ்ட் 28 அன்று உச்சத்தில் இருந்த, செயலில் உள்ள நேர்வுகளின் எண்ணிக்கை எட்டாவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
பெர்லிஸ் (99), பேராக் (1,450) ஆகிய இரண்டு மாநிலங்களும், இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகளை இன்று செய்துள்ளன.
இதற்கிடையில் இன்று, 21,582 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 460 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (3,775), சரவாக் (2,723), சபா (2,279), ஜொகூர் (2,077), பினாங்கு (1,558), பேராக் (1,450), கிளந்தான் (1,434), கெடா (1,329), கோலாலம்பூர் (711), திரெங்கானு (605), பகாங் (410), மலாக்கா (338), நெகிரி செம்பிலான் (242), பெர்லிஸ் (99), புத்ராஜெயா (18), லாபுவான் (9).
நாட்டில் பதிவான 4,854 திரளைகளில், 1,455 இன்னும் செயலில் உள்ளன. இன்று பதிவாகியுள்ள 16 புதிய திரளைகளும் இதில் அடங்கும்.