20,396 புதிய நேர்வுகள், மொத்த இறப்பு விகிதம் 18,000-ஐ தாண்டியது

கோவிட்- 19 | கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,396 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இன்று 336 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 18,219- ஆக உயர்த்தியுள்ளது. இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை (171) சிலாங்கூரில் பதிவாகியுள்ளன

இதற்கிடையில் இன்று, 20,573 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 959 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 436 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (3,886), சரவாக் (3,747), ஜொகூர் (2,165), சபா (2,136), பினாங்கு (1,961), கெடா (1,587), கிளந்தான் (1,078), பேராக் (1,057), திரெங்கானு (861), கோலாலம்பூர் (597), பகாங் (486), மலாக்கா (459), நெகிரி செம்பிலான் (269), பெர்லிஸ் (78), புத்ராஜெயா (25), லாபுவான் (4).

மேலும் இன்று, 37 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.