“அந்த என்எப்சி ஊழல் கிராமப்புற மலாய்க்காரர்களும் புரிந்து கொண்டு கண்டிக்கக் கூடிய விஷயமாகும். அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் னை மண்டியிடச் செய்வதற்கு அவர் திறவுகோலாக இருக்கக் கூடும்.”
பதவி துறக்குமாறு விடுக்கப்படும் வேண்டுகோளை ஷாரிஸாட் புறக்கணிக்கிறார்
ஷானாண்டோ: மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் பதவி துறக்க மறுத்தால் அடுத்த 13வது பொதுத் தேர்தல் நிகழும் போது பிஎன் நிறைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
கால் நடைகளை வளர்ப்பதற்காக அவருடைய கணவருக்கும் பிள்ளைகளுக்கும் இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றால் சரியான சிந்தனையைக் கொண்ட யாரும் அம்னோவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
இது அம்னோ அமைச்சர் ஒருவருடைய அப்பட்டமான பகற்கொள்ளையாகும். அவர் அந்த தேசிய விலங்குக் கூட நிறுவன (என்எப்சி) ஊழலுக்குப் பொறுப்பேற்க மறுக்கிறார். ஒரு திருடன் என்ன நடந்தாலும் தான் திருடன் என ஒப்புக் கொள்ளவே மாட்டான்.
பிரடோ குருடன்: ஆம். ஷாரிஸாடை நெருக்க வேண்டாம். அந்த என்எப்சி ஊழல் கிராமப்புற மலாய்க்காரர்களும் புரிந்து கொண்டு கண்டிக்கக் கூடிய விஷயமாகும். அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்- னை மண்டியிடச் செய்வதற்கு அவர் திறவுகோலாக இருக்கக் கூடும்.
இனவாதி அல்லாத மலேசியர்கள் அவரை ஏன் ‘மாமா’ எனச் சொல்கின்றனர்? அத்தகைய இனவாத அம்சங்களை குறிப்பிடாமல் அவரைக் குறை கூறுவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன.
பெண்டர்: கடந்த அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில் அவர் காட்டிய காரசாராமான போக்கு எங்கே போனது?
அப்போது அவர் என்எப்சி ஊழல் பற்றிப் பேசிய போது “சண்டையிடுவதற்கு” தயாராக இருப்பதாக ஆவேசமாகக் கூறினார்.
ஆனால் இப்போது ‘இல்லை, இல்லை’ என்று மட்டும் சொல்லி விட்டு ‘ஒடி விடுகிறார்’. அவர் என்ன தலைவர், செனட்டர், அமைச்சர்?
மக்களைக் குறிப்பாக நிருபர்களை எதிர்கொள்ளும் போது அவர் அதே ஆவேசத்தைக் காட்ட வேண்டும். தம்மை நேசிப்பதாக காட்டிக் கொள்ளும் மக்கள் நிறைந்திருந்த கட்சி பொதுப் பேரவையின் போது அல்ல.
மாற்றத்தின் முகவர்: ஷாரிஸாட் ஏன் பதவி விலக வேண்டும்? காரணம் அத்தகையை போக்கை ஏற்றுக் கொள்கிற அமைப்பை ஒன்றைச் சார்ந்தவர். அம்னோ மகளிர், அவருக்கு கைதட்டி வரவேற்றுள்ளனர். அது போன்று தீய வழிகளில் ஆதாயம் பெற பலர் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மலேசியன்53: மில்லியன் கணக்கான அம்னோ உறுப்பினர்களிலும் ஆயிரக்கணக்கான தலைவர்களிலும் மூவர் மட்டுமே ஷாரிஸாட் விலக வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
அவர் ராஜினாமா செய்வதோடு விஷயம் முடிந்து விடக் கூடாது. என்எப்சி தலைமை நிர்வாகி என்னும் முறையில் எல்லா நிதிகளுக்கும் பொறுப்பேற்பதும் முக்கியமாகும். அந்தப் பணத்தை மீட்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
அரசாங்கக் கடனிலிருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு சம்பளம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஷாரிஸாட்டின் கணவருக்கு மாதம் ஒன்றுக்கு 100,000 ரிங்கிட் சம்பளம். அவருடைய 31 வயதான மூத்த புதல்வருக்கு மாதம் ஒன்றுக்கு 45,000 ரிங்கிட்டும் 27 வயதான இரண்டாவது புதல்வருக்கு மாதம் ஒன்றுக்கு 35,000 ரிங்கிட்டும் 25 வயதான மூன்றாவது புதல்வருக்கு மாதம் ஒன்றுக்கு 35,000 ரிங்கிட் ஊதியம் கொடுக்கப்படுகிறது.
ஆகவே அந்தக் குடும்பத்துக்கு மொத்த மாத சம்பளம் 215,000 ரிங்கிட்- அல்லது வருடம் ஒன்றுக்கு 2.58 மில்லியன் ரிங்கிட்- அம்னோ/பிஎன் அரசாங்கம் அங்கீகரித்த நிதியிலிருந்து. அவ்வளவு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதற்கு அந்த பிள்ளைகளுக்கு என்ன தகுதி/அனுபவம் உள்ளது?
கோபார்இட்: நிருபர்களிடமிருந்து ஒடுவது மக்களிடமிருந்து ஒடுவதற்கு ஒப்பாகும். அந்த எளிய கடன் எப்படிக் கொடுக்கப்பட்டது என்பதை அவர் விளக்க வேண்டும். அதனைக் கேட்பதற்கு குடிமக்களுக்கு உரிமை உண்டு.
அமைச்சர் என்னும் முறையில் உங்கள் செல்வாக்கு இல்லை என்றால் அந்தக் கடன் உங்களுக்கு எப்படிக் கிடைத்திருக்கும்?
அடையாளம் இல்லாதவன்: எல்லா அம்னோ உறுப்பினர்களும் ‘மக்கள் பிரதிநிதி’-யாவதற்கு விரும்புவதற்கு -தங்கள் சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்வதற்கு- இதுதான் காரணமோ?
எது எப்படி இருந்தாலும் அவர் ஏன் விலக வேண்டும்? மற்ற அமைச்சர்கள் எடுத்துக் கொண்டதுடன் ஒப்பிடுகையில் என் எப்சி-யிலிருந்து அவர் எடுத்துக் கொண்டது உண்மையில் கோழித் தீவனமாகும்.