கேஜே : மூன்றாவது மருந்தளவு ஊசி அக்டோபர் தொடக்கத்தில் தொடங்கும்

அக்டோபர் தொடக்கத்தில் மூன்றாவது மருந்தளவு ஊசி செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.

மூன்றாம் மருந்தளவு ஊசி பெறுவதற்கு, அடையாளம் காணப்பட்ட குழுக்களில் நோயுற்ற முதியவர்கள், அதிக ஆபத்துள்ள சூழ்நிலைகளில் முன் வரிசையில் வேலை செய்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் முதியோர் இல்லங்களின் ஊழியர்கள் அடங்குவர் என்று கைரி கூறினார்.

“அதன்பிறகு நாங்கள் மற்றவர்களுக்குத் திறந்துவிடுவோம், முதல் குழுவிற்கு அக்டோபர் தொடக்கத்தில் செயல்படுத்தப்படும்.

முன்னதாக, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், பொதுமக்களுக்குப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக, கோவிட் -19 தடுப்பூசியின் மூன்றாவது மருந்தளவை வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.

முதலில் அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.

இஸ்மாயில் சப்ரியின் கூற்றுப்படி, நாடு முழுவதும் பெரியவர்களுக்குத் தடுப்பூசி 80 விழுக்காட்டைத் தாண்டிய பிறகு மூன்றாவது மருந்தளவு வழங்கப்படும்.