சுய-தனிமைப்படுத்தல் உத்தரவை மீறுபவர்களைக் கைது செய்ய, மைசெஜாத்திராவுக்கு நிகழ்நேர தரவை வழங்குமாறு உள்துறை அமைச்சு (கேடிஎன்) சுகாதார அமைச்சைக் கேட்டுள்ளது.
வீட்டுக் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு உத்தரவின் (எச்.எஸ்.ஓ) கீழ் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து 523 செக்-இன்ஸை அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது.
அதன் அமைச்சர் ஹம்ஸா ஜைனுடின் கூற்றுப்படி, தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுபவர்களின் 18 விழுக்காடு பேரங்காடிகளில் நடந்ததுள்ளது.
“எஸ்.ஓ.பி.-க்கு இணக்க, அமலாக்க ஒருங்கிணைப்புக் குழு (ஜே.கே.பி.எஸ்.), கள அமலாக்க நோக்கங்களுக்காக எச்.எஸ்.ஓ. உத்தரவை மீறுவது பற்றிய தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு அனுப்புமாறு சுகாதார அமைச்சிடம் கேட்டுள்ளது,” என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தரவுகளுடன், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறுபவர்களை வெளியில் அல்லது வீட்டில் இருக்கும்போது காவல்துறையினர் கைது செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
வளாகத்திற்குள் அனுமதிக்கும் வணிகங்களும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

























